கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி பிரதீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முதற்கட்டமாக கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). தற்போது இருவரும் சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததுடன், பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் அருகேயுள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரது தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக, பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...