கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் செப்டம்பர் 29, 2026 செவ்வாய்கிழமை அன்று அவிநாசி ரோட்டில் உள்ள PRS வளாகத்தில் இருக்கும் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன. வாகனங்களை காண விரும்புவோர் ஆயுதப்படை மைதானம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம், காரமடை காவல் நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் செப்டம்பர் 28, 2026 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஆதார் அட்டையுடன் ரூ.10,000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற வேண்டும்.
Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பர் 29, 2026 செவ்வாய்கிழமை அன்று பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களின் மதுவிலக்கு வழக்குகளில் (Prohibition Act) சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் உரிய நடவடிக்கைக்கு பின் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. கோவை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, ஏலக்குழு அதிகாரிகள் முன்பாக வாகனங்கள் எந்தநிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 29.09.2026 செவ்வாய்கிழமை அன்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள PRS வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்களை பொது ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்கண்ட இடங்களில் வாகனங்களை பார்வையிடலாம்:
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள PRS வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானம்
கோவில்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகம்
நான்கு சக்கர வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரமடை காவல் நிலையம்
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 28.09.2026 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு அசல் ஆதார் மற்றும் ஒரு ஜெராக்ஸ் நகலுடன் கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து ரூபாய் 10,000 மட்டும் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ளலாம். டோக்கன் பெறாதவர்கள் வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாகனங்களை ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகையையும், அதற்கு உண்டான சரக்கு வரி மற்றும் சேவை வரி (18% GST) உடன் சேர்த்து முழுவதையும் அன்றே அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.