கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வத் திருக்கல்யாண உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வத் திருக்கல்யாண உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் 108 பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

51 தட்டுகளில் சீர்வரிசைகள் மங்கல இசையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு நடைபெற்ற வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.

கொங்குநாடு, கோவை மாவட்டம், வடக்கு வட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வேண்டியதை வேண்டியவர்களுக்கு நித்தம் அள்ளித்தரும் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வத் திருக்கல்யாண உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.



அதிகாலை கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் தொடங்கி இவ்விழாவில் நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிவ வாத்தியங்களுடன் 108 பால்குடங்கள் மற்றும் முளைப்பாளிகை எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலையில் பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு 108 பால்குடங்களைக் கொண்டு பால் அபிஷேகம், திருகுடநீர் அபிஷேகம், மகா அபிஷேகம், பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு திருநீர் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 18 வகையான மூலிகைகள் மூலம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அனைத்து தெய்வங்களும் வெள்ளிக் கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாலை அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வத் திருக்கல்யாண உற்சவ திருவிழா கோவில் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து முருகன் சிலையுடன் 51 தட்டுகளில் பட்டுப்புடவை, வேஷ்டி சட்டை, பழங்கள், இனிப்புகள், வெற்றிலை பாக்கு, வளையல், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட சீர்வரிசைகள் மங்கல இசையுடன் ஊர்வலமாக பெண்கள் கோவிலுக்கு கொண்டுவந்தனர்.

அதைத் தொடர்ந்து புரோகிதர்கள் சிறப்பு யாகங்கள் நடத்தி ஆகம விதிப்படி நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தெய்வத்திருக்கல்யாண உற்சவத்தை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, பூப்பந்து விளையாட்டு, தேங்காய் உருட்டும் விளையாட்டுகள் நடைபெற்றன. இரவு மங்கல இசை மற்றும் சிவவாத்தியத்துடன் திருவீதி உலா மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை, மதியம், இரவு என 3 வேளைகளும் அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...