ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 53.4 அடியாகவும், வால்பாறை சோலையாறு அணையில் 76.38 அடியாகவும் செப்டம்பர் 17 நிலவரப்படி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 298 கன அடி நீர் வரத்தில் 450 கன அடி வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளம் அணைக்கு 1112 கன அடி நீர் வரத்தில் 426 கன அடி வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணைக்கு 352 கன அடி நீர் வரத்தில் 927 கன அடி வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர் வரத்து ஏற்பட்டு, செப்டம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 65.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 298 கன அடி நீர் வந்து சேர்கிறது. அணையில் இருந்து 450 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து, செப்டம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 53.4 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1112 கன அடி நீர் வந்து சேர்கிறது. அணையில் இருந்து 426 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர் வரத்து ஏற்பட்டு, செப்டம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் 76.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 352 கன அடி நீர் வந்து சேர்கிறது. அணையில் இருந்து 927 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...