அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக, கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 90 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியிருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. கோவை மாவட்டத்திலும் நடந்து வரும் இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.
கோவையில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 90 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் தனியார் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு பேருந்துகள் இல்லாமல் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே, அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், அரசு பேருந்துகள் இயங்காததால் உரிய நேரத்தில் பேருந்துகள் கிடைப்பதில்லை எனவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் பேருந்துகள் ஓரளவு இயக்கப்பட்டாலும், வெளியூர் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவதால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல சாய்பாபா காலணி பேருந்து நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் 90 சதவிகித அரசு பேருந்துகளும், காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் 80 சதவிகித அரசு பேருந்துகளும் இயங்கவில்லை.
உக்கடம், காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து 80 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் இயங்காததால் தனியார் பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
வால்பாறை பேருந்திற்கு தற்காலிக ஓட்டுநர்கள்:-
வால்பாறையில் அரசு போருக்குவரத்துக் கழகத்தில் 37 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தற்போது 32 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளும் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி, ஆழியாரில் இருந்து வால்பாறை சாலையானது குறுகியதும், கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைப்பகுதி சாலை ஆகும். தற்போது இயக்கப்படும் 32 பேருந்துகளிலும் தற்காலிக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுவதால் மலைப்பாதையில் அந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என வால்பாறை மக்கள் தெரிவித்துள்ளனர்.