கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபரை இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதும் மன்னிப்பு கேட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில், நேற்று அதிகாலை திருட முயன்றதாகக் கூறப்படும் வடமாநில வாலிபர் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், விடுதியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பூட்டை உடைத்து திருட அந்த நபர் நீண்ட நேரம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனத்தின் பூட்டை உடைக்க முடியாமல் தவித்த நிலையில், இரவு பணி முடித்து வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அவர், விடுதியின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் செல்போன்களைத் திருட முயன்றபோது, எதிரே உள்ள மற்றொரு விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் அவரைக் கண்டு சந்தேகமடைந்து விரட்டிச் சென்று கையும் களவுமாகப் பிடித்தனர்.

நள்ளிரவில் முன்பின் தெரியாத நபர் விடுதிக்குள் சுற்றித் திரிந்ததைப் பார்த்த இளைஞர்கள், அவரைச் சுற்றி வளைத்து, “யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?” என்று விசாரித்தனர். தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இளைஞர்களின் காலில் விழுந்து, “என்னை விட்டுவிடுங்கள்… தெரியாமல் செய்து விட்டேன்” என்று இந்தி மற்றும் அரைகுறை தமிழில் கைகளை கூப்பி அழுது மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது நாடகத்தை நம்பாத இளைஞர்கள், உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு, அந்தப் பகுதியில் உள்ள மற்ற விடுதிகள் மற்றும் வீடுகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...