சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆண்டுதோறும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தவும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூரில் பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 12.05.2026 அன்று கல்லூரி வளாகத்தில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் SNR Sons அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் Dr. Sundhar Ramakrishnan மற்றும் iGenius AI Private Limited இன் இயக்குநர் & முதன்மை கட்டமைப்பாளர் Kalirajan Panchalingam ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, iGenius AI Private Limited உடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 SDG Goals ஐ அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் 24 மணிநேர ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பயணம், விசா மற்றும் பிற ஏற்பாடுகள் அனைத்தையும் iGenius நிறுவனம் மேற்கொள்ளும்.


சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், iGenius நிறுவனம் இலவச Microsoft இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்கும். இது மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தையும், உலகளாவிய தொழில் வாய்ப்புகளையும் பெற உதவும்.


இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N. Sumathi ஆகியோர் உடனிருந்தனர். இந்த கூட்டு முயற்சி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்க்கவும், சர்வதேச அளவில் போட்டியிடவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...