வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு நாட்களில் தன் மீது 110 வழக்குகள் சுமத்த முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


Coimbatore: இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேட்புமனுவை கடந்த புதன்கிழமை (02.04.2026) அன்று பேரூர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.






இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே காவல் துறையினர் உள்நோக்கத்துடன் அவர் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.






வேட்புமனு தாக்கல் செய்த இரண்டே நாட்களில், சில காவல்துறையினரின் தூண்டுதலின் பேரில் சுமார் 110 வழக்கு தன் மீது சுமத்த முயற்சிப்பதாக K. Surya தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கிலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயல் திட்டமிட்டு செய்யப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.






ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், தன்னை மட்டும் குறிவைத்து இத்தனை வழக்குகளைப் போட முயற்சிப்பது ஒரு மனித உரிமை மீறல் என அவர் சாடியுள்ளார். குறிப்பாக கோவை மாநகர செல்வபுரம் காவல் நிலையக் காவல்துறையினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.






இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி IAS, சென்னை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் IAS மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு அவர் அவசரப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.






தன் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...