கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயந்துள்ளது. இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 5.250 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் மண்டல் மகன் மோசம் குமார் (30). இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




இந்த வழக்கில் மோசம் குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Bhavani K. Reddy, IPS அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, IAS அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.




மேற்படி உத்தரவின்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வழக்கு குற்றவாளியான மோசம் குமார் (30) என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.




பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.




இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் நிழல் (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களைப் பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

Newsletter

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...