கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகரித்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900 வரை விற்பனையானது.


Coimbatore: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் இந்த மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து சேருகின்றன.




ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு நேரடியாக மீன் வாங்க வருகின்றனர்.




இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு மற்றும் கூட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.




நேற்று மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.




இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது" என்று தெரிவித்தனர்.




இதுபற்றி மீன் வியாபாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்களின் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...