தீபாவளியை முன்னிட்டு கோவை கடல் கன்னி கண்காட்சி நவம்பர் 3 வரை நீட்டிப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் கடல் கன்னி கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் கடல் கன்னி பொருட்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் உலாவரும் செயற்கை கடல் குகை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு கடல் கன்னிகளின் சாகசங்கள், மீன் உடையுடன் உலாவரும் கடல் கன்னிகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடல் கன்னிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மக்கள் மட்டுமின்றி பெங்களூரு, பாலக்காடு போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.



வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழலும் ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், பனி கூடம் (Snow World), பேய் வீடு, 3D காட்சிகள், பலூன் கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

கண்காட்சி பங்குதாரர் சந்திரசேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அபுதாகிர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மக்களின் விருப்பத்தின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை கடல் கன்னி பொருட்காட்சியுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்," என்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...