கோவை: மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு

கோவை சிங்காநல்லூர் அருகே கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், கால்வாய்கள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிங்காநல்லூர் அருகே உள்ள கதிரவன் கார்டன் பகுதியில், வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில், அவர்களது குடியிருப்பு பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



மக்கள் அமைச்சரிடம் சாலைகள் அமைத்துத் தருமாறும், வாய்க்காலை முறையாகப் பராமரித்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...