கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நம்ம ஊரு சந்தை நடைபெற்றது

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினரால் நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டது. இயற்கை விவசாய பொருட்கள், நெகிழி இல்லாத சூழலில் விற்பனை செய்யப்பட்டன.


Coimbatore: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினர் சார்பில் "நம்ம ஊரு சந்தை" என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெற்றது. இந்த சந்தை பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.



மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...