பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரிக்கை

கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பேரூர் பெரியகுளத்திற்கு இரண்டு மிகை நீர்ப்போக்கிகள் உள்ளன. பேரூர் சிறுவாணி சாலை அருகில் 86 அடி அளவிலான மிகைநீர்ப்போக்கி அமைந்துள்ளது. இந்த மிகைநீர்ப்போக்கியின் உயர்ந்தபட்ச நீர் மட்டத்தை அடையும் முன்பே, அதன் அருகாமையில் உள்ள பேரூர் பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வழியாக குளத்தின் நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக, குளத்தின் நீர் தேங்கும் பரப்பளவு 1.072 சதுர கிலோமீட்டரிலிருந்து 9 அங்குலம் குறைந்துள்ளதாகவும், இதனால் 24 கோடி லிட்டர் நீர் தேங்கும் திறனை இழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர் வரத்து உள்ள காலத்திலேயே குளத்தின் கொள்ளளவு முழு மட்டத்திற்கு இருப்பதை உறுதி செய்யும்படியும், மிகைநீர் போக்கியின் அருகாமையிலுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக குளத்து நீர் வெளியாவதை தடுக்க போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையானது மாவட்ட ஆட்சித்தலைவர், நீர் வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர், மற்றும் நொய்யல் பாசன உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...