மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மலையப்ப சாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.



விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்.

வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா" கோஷங்கள் முழங்க திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வளம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...