கோவை குனியமுத்தூரில் அதிமுக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: இரு இளைஞர்கள் கைது

கோவை குனியமுத்தூரில் அதிமுக 92-வது வார்டு செயலாளர் ஜூனியர் ராஜா மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்று அழைக்கப்படும் ஜூனியர் ராஜா (42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு, கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வார்டு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜூனியர் ராஜா குனியமுத்தூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜூனியர் ராஜா கடுமையாக காயமடைந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பலத்த காயமடைந்த நிலையில் ஜூனியர் ராஜா அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கொண்ட விசாரணையில், கோபிநாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜூனியர் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, கோபிநாத் தனது நண்பன் பூமேஸ்வரனை கரூரிலிருந்து அழைத்து வந்து ஜூனியர் ராஜா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...