மேட்டுப்பாளையம் அருகே பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டிடத் தொழிலாளி ரசூல் உயிரிழந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் அவிநாசி சாலையில் வசித்து வந்த ரசூல் என்ற கட்டிடத் தொழிலாளி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அன்னூரில் இருந்து கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த பிக்கப் வாகனம் ஒன்று, ஜீவா நகர் பகுதியில் ரசூலின் வாகனத்தின் மீது மோதியது.

இந்த மோதலில் ரசூல் சாலையில் தூக்கி வீசப்பட்டார். மேலும், பிக்கப் வாகனமும் சாலையின் நடுவே கவிழ்ந்தது. கடுமையாக காயமடைந்த ரசூல் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.



இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வாகன ஓட்டுநர் ஹரிகுமார் மீது அன்னூர் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...