மேட்டுப்பாளையம் அருகே: பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட உள்ளூர் மக்கள்

மேட்டுப்பாளையம் அருகே வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற குடும்பம் திடீர் வெள்ளத்தில் சிக்கியது. உள்ளூர் மக்கள் கயிறு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் துணி துவைக்கச் சென்ற குடும்பத்தினர் திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில், உள்ளூர் மக்கள் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ராம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் சென்றனர்.

அங்கு அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டனர்.

இதைக் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்த தோட்டங்களில் இருந்து கயிறுகளை எடுத்து வந்து, அவற்றைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 5 பேரிடமும் அறிவுரை கூறிய பொதுமக்கள், இந்த இடத்தில் குளிக்கக் கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதை மீறி குளித்ததால் தான் இந்த அபாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலाம் என்பதால் தான் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...