பொள்ளாச்சியில் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்: 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

பொள்ளாச்சியில் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையம் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.



சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராகவேந்திரா ராவ் தனது உரையில், மத்திய அரசும் மிராக்கல் ஒருங்கிணைந்த மருத்துவ மையமும் இணைந்து புற்றுநோய் குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தம் இந்த நிகழ்ச்சியில் கையெழுத்தானதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கருத்தரங்கில், மிராக்கல் மையத்தில் நடைபெற்று வரும் புற்றுநோய் சிகிச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனையில் அனைத்து விதமான புற்று நோய்களையும் எவ்வித பக்க விளைவும் இன்றி குணப்படுத்தும் முறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிராக்கல் மேலாளர் ரமேஷ் குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்ன...

லாரியின் இடதுபுற சக்கரம் ஏறி சைக்கிள் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 70 வயது காளிமுத்து சைக்கிளில் சென்றபோது, அலட்சியமாக வந்த லாரி மோதியது. கீழே விழுந்த காளிம...

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உ...

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...