பொள்ளாச்சியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை கொண்டாடிய திமுகவினர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: பழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர்.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



முதலில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



இந்த நிகழ்வு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



நிகழ்ச்சியில் கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பணப்பட்டி தினகரன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், திமுக செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் ஆறுபடை வீடு முருகன் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 60 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்ன...

லாரியின் இடதுபுற சக்கரம் ஏறி சைக்கிள் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கோவை ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 70 வயது காளிமுத்து சைக்கிளில் சென்றபோது, அலட்சியமாக வந்த லாரி மோதியது. கீழே விழுந்த காளிம...

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உ...

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...