மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

மேட்டுப்பாளையத்தில் மூன்று நாள் குடிநீர் விநியோக தடைக்குப் பிறகு, நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா அறிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் இன்று நிறைவடையும்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாளை (செப்டம்பர் 21) முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றிலிருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 1 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, சாமண்ணா நீரேற்று நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.

சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் அமுதா நேற்று (செப்டம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில், "சுத்திகரிப்பு நிலையத்தில் சேரும் சகதி அதிகளவில் படிந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நகரில் குடிநீர் குழாய்களில் உள்ள உடைப்புகள் மற்றும் தண்ணீர் கசியும் இடங்களில் குழாய்கள் மாற்றும் பணிகளும், உடைப்புகள் சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன," என்று தெரிவித்தார்.

மேலும், "அனைத்து பணிகளும் இன்று (செப்டம்பர் 20) முடிக்கப்படும். நாளை (செப்டம்பர் 21) முதல் பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...