'யாரை துணை முதல்வர் ஆக்குவது ஆளுங்கட்சியின் முடிவு' - தொல்.திருமாவளவன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், துணை முதல்வர் நியமனம், தேசிய கல்விக் கொள்கை, தேசிய மதுவிலக்குக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

அறிவாலயத்தில் துணை முதல்வருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது வருவதாக வந்த தகவல் தொடர்பான கேள்விக்கு, யாரைத் துணை முதல்வர் ஆக்குவது, யாரை அதிகாரத்தில் அமர வைப்பது என்பது ஆளுங்கட்சி எடுக்கின்ற முடிவு என்றும் முடிவெடுத்த பிறகு தான் கருத்து சொல்ல முடியும் என்றும் கூறினார்.

தேசிய கல்வி கொள்கை வேறு, தேசிய மது விலக்கு கொள்கை வேறு, தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற சில மாநிலங்களும் கருத்து முரண்பாடு கொண்டுள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்று நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதுவதாகும் அதனால் அதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய மதுவிலக்கு கொள்கை என்பது தேசிய அளவிலான மனித வளத்தை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் இந்தியாவில் குஜராத் பீகார், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தவிர எல்லா மாநிலங்களில் அரசு மதுபான வியாபாரத்தை செய்வதால் தேசத்திற்கான மனித வளம் பாலாகிறது என்றும் கூறிய அவர், அதனால் அரசியல் அமைப்பு சட்டம் உறுப்பு எண் 47ன் படி தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும் என்றும் அதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமான கோரிக்கையோ, அதேபோல் இந்தியா முழுவதும் மது கடைகளை மூட வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு தேசிய மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறினார்.

எச்.ராஜா கருத்துக்கு, முதல்வரை சந்திப்பதற்கு முன்பு என்ன கோரிக்கைகளை பேசினோமோ அதே கோரிக்கைகளை தான் முதல்வரை சந்தித்த பிறகும் பேசிக் கொண்டிருப்பதாக கூறினார். தங்கள் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தங்கள் கருத்தில் திமுக உடன்படுவதால் தங்கள் மாநாட்டில் பங்கேற்க இசைவு அளித்திருப்பதாகவும் கூறினார்.

திமுகவை உட்கார வைத்து எப்படி மது ஒழிப்பை பேசுவீர்கள் என்பது தொடர்பான கேள்விக்கு, நாங்கள் பேசுகிறோமோ? இல்லையா? என்பதை மாநாட்டின் போது பாருங்கள். என்றார்.

அன்னபூர்ணா உரிமையாளர் பேசிய கருத்து மிகவும் சரியானது என்றும் அதை வரவேற்பதாகவும் கூறிய திருமாவளவன், அவரை அழைத்து கொண்டு போய் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது வேதனை அளிப்பதாகவும் அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும் கூறினார்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...