கோவையில் 2017ம் ஆண்டின் அரிமா சங்கத்தின் 8வது கூட்டு மாவட்ட மாநாடு

தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற அரிமா சங்கம் 324 கூட்டு மாவட்டம், 12 மாவட்டங்களைக் கொண்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இந்த இயக்கத்தின் மிகப்பெரிய மாநாடாக 2017-ம் ஆண்டின் அரிமா சங்கம் சார்பில் 8-வது கூட்டு மாவட்ட மாநாடு வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.



இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிமாக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பன்னாட்டு இயக்குநர் தொழிலதிபர் அரிமா ஜி.ராமசாமி அகில உலக அரிமா இயக்கத்தின் 3வது உதவி தலைவராக முன்மொழிவு செய்து தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குநர்கள் அரிமா தனபாலன், அரிமா விஜயகுமார் ராஜு மற்றும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர், அரிமா ராமகிருஷ்ணமூர்த்தி, அரிமா நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில், எதிர்வரும் அரிமா ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்புகள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மேலும் 2018- 2020ம் ஆண்டிற்கான பன்னாட்டு இயக்குநர் தேர்வுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. கூட்டு மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா பாலாஜி ரத்தினம் தலைமை வழிகாட்டுதலின் படி, மாநாட்டுத் தலைவர் அரிமா நௌரத்தன்மல் சாங்கலா மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...