கோவை அவினாசி சாலையில் அண்ணாவின் 116வது பிறந்தநாள்: அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.

பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...