கோவையில் தங்கக் கட்டிகளை வாங்கி நூதன முறையில் மோசடி செய்த 4 பேர் கைது

கோவையில் தங்க வியாபாரியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும் மீட்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் தங்க வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ஹரிசங்கரை சந்திரசேகர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகக் கூறினார். கடந்த செப்டம்பர் 11 அன்று ஒரு கிலோ தங்கக் கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வரும்படி ஹரிசங்கரிடம் கேட்டுக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஹரிசங்கரிடம் சந்திரசேகர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மேனேஜர் ராஜ்குமாரை அனுப்புவதாகவும் கூறினார். ராஜ்குமார் தங்கக் கட்டிகளை வாங்கிய பின், தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி, லட்சுமி மில் பகுதியில் சந்திப்பதாகச் சொன்னார்.

ஆனால், லட்சுமி மில் பகுதிக்கு வந்த ஹரிசங்கர் ராஜ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் ஒரு இளைஞர் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

செப்டம்பர் 13 அன்று நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...