கோவை மத்திய சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையால் அரசுப்பொருட்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 182-ஆவது அரசுப் பொருட்காட்சியினை திறந்து வைத்தார்.
அரசுப்பொருட்காட்சி துவக்கப்பட்ட 8 நாட்களில் 31,723 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள். இதன் மூலம் அரசிற்கு ரூ.4.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இப்பொருட்காட்சியில் அரசின் திட்டங்களின் பயன்களும் மற்றும் அரசு வழங்கும் திட்டங்கள் பெறுவது குறித்து வழிகாட்டுதலுக்கான செயல்முறை விளக்கங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளதை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று பார்வையிட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்பொருட்காட்சியில் கோடை நாட்களை பொழுதுபோக்கும் வகையில் குழந்தைகள், மாணவ மாணவிகள் மட்டுமின்றி பெரியவர்கள் அனைவரும் விளையாடி மகிழும் வன்னம் பனி உலகம், பெரிய அளவிளான இராட்டினங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் பாதுகாப்பு அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்கேற்ப பொருட்காட்சி வளாகத்திலேயெ குடிநீர் வசதி, கழிப்பறை வசதி அமைக்கப்பட்டதுடன் பாதுகாப்பு நலன் கருதி புறக்காவல் நிலையம் மற்றும் முதலுதவி மையம், தீயணைப்பு வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுகின்ற அரசுப் பொருட்காட்சியினை பொதுமக்கள் அதிகளவில் கண்டு பயனடைய வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.