பொள்ளாச்சி அருகே இரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் மற்றும் தேவனாம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் நாளை (செப்டம்பர் 11) மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, மில் கோவில்பாளையம், முள்ளுபாடி, செங்குட்டைபாளையம், என்.ஜி புதூர், வடக்கிபாளையம், பெரும்பதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம், குளத்துப்பாளையம், சேரி பாளையம், ஆண்டிப்பாளையம், வகுதம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கப்பளாங்கரை ஒரு பகுதி, செரிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின் தடை நாளை (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மின்நுகர்வோர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...