யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார். யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் PM-SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதல் குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கல்வியில் தாய்மொழி கல்வியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் குறித்து பேசிய அமைச்சர், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் செய்தியாளர்களாக இருக்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கிறது" என்றார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர், தேசத்திற்கு எதிராக செயல்பட்ட 69 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...