கோவை மாவட்டம், ஹோப்காலேஜ் அருகே
அமைந்துள்ள தண்ணீர்பந்தல் குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் நிறைந்த
பகுதியாகும். இந்நிலையில், இன்று மே தினத்தினை முன்னிட்டு அனைத்து
நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில்
செயல்பட்டு வந்த பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், அந்த குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விடுமுறை நாள் என்பதால் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த தீயனைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.