கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கைது

கோவை- பொள்ளாச்சி  நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையாக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.



இதற்காக சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் சாலையின் இரு புறமும் கற்களை கொட்டி காங்கிரீட் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் குறுகிய சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் அப்பேருந்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி அந்த சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகளும் தங்களது உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது.



இதனிடையே, கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய தனியாா் பேருந்து ஓட்டுனர்கள் வைரமுத்து (42), நாகராஜ் (41) ஆகியோா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் இன்று அவர்களை கைது செய்யதனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை கிணத்துக்கடவு காவல் துறையினர் சிறை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேர்ட்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான பேருந்து போக்குவரத்து மிகவும் ஆபத்தான சாகசமாக உள்ளது. தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு பயணிகளின் உயிரில் விளையாடி வருகின்றனர். இதனால் கோவை- பொள்ளாச்சி சாலையில் விபத்து அன்றாடக்காட்சியாகி விட்டது. காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அதிவேகமாக செல்லும் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு மட்டுமின்றி பேருந்துகளையும் ஜப்தி செய்ய வேண்டும்" என்றனர்.



இதனிடையே விலை உயர்ந்த இரண்டு கார்களில் பொள்ளாச்சி சாலை வழியாக அதிவேகமாக ஓட்டும் போட்டியில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த கார் ஓட்டுனர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...