கோவை சிங்காநல்லூரில் நூதன முறையில் பைக் திருட்டு: சோதனை ஓட்டம் என்ற பெயரில் மோசடி

கோவை சிங்காநல்லூரில் உள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் ஒரு வாலிபர் விலையுயர்ந்த KTM பைக்கை திருடிச் சென்றார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியில் உள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் பைக் திருட்டு நடந்துள்ளது. சோதனை ஓட்டம் என்ற பெயரில் ஒரு வாலிபர் விலையுயர்ந்த KTM பைக்கை திருடிச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த சபரி ஸ்ரீனிவாசன் (34) என்பவர் அங்குள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 3 அன்று, டிப் - டாப் உடையணிந்த ஒரு வாலிபர் கடைக்கு வந்து KTM பைக் வாங்க விரும்புவதாகக் கூறினார்.

கடை ஊழியர்கள் அவருக்கு விலையுயர்ந்த KTM பைக்கை காட்டினர். வாலிபர் பைக்கை சோதனை ஓட்டம் செய்ய விரும்பினார். மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் அனுமதி அளித்தார். பாதுகாப்பிற்காக கடை ஊழியர் நவீனை உடன் செல்லும்படி கூறினார்.

வாலிபர் நவீனை பின்னால் அமர வைத்து பைக்கை ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், தான் தனியாக ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறி நவீனை காமராஜர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் இறக்கி விட்டார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

இந்த நூதன திருட்டு குறித்து மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து திருடனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...