என் உறவுகள் எல்லாம் கோவையில்தான் இருக்கிறார்கள் - மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். கோவைக்கும் தனக்கும் உள்ள உறவை கார்த்தி பகிர்ந்து கொண்டார்.



Coimbatore: கோவை கொடிசியா வளாகத்தில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, ஸ்ரீ திவ்யா, அர்விந்த் சுவாமி, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, "கல்யாணத்திற்குப் பிறகு கோவையில் எனக்கு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுதான். இந்த ஊருக்கும் எனக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கிறதோ, அந்த மாதிரியான விஷயத்தை மெய்யழகன் படமும் பேசும். அதனால் இந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.



மேலும் அவர், "எங்களின் வேர்கள், உறவுகள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் நிகழ்ச்சியை இங்கு நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது" என்று கூறினார்.

படத்தின் மற்ற நடிகர்களும் பாடகர்களும் பேசுகையில், இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் கருப்பொருளைக் கொண்டு தஞ்சாவூரை சார்ந்து இப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், வரும் காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



'மெய்யழகன்' திரைப்படத்தில் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...