கோவை - பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 6 வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை கோவையில் இருந்து பரௌனிக்கும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6 வரை பரௌனியில் இருந்து கோவைக்கும் இயக்கப்படும்.

கோவை - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, பரௌனி - கோவை சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06060) வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு பரௌனியில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் பயணத்தின் போது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூர், ரூர்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி, பகோரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கோவை மற்றும் பிகார் மாநிலம் இடையேயான பயணிகள் போக்குவரத்து எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...