நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்ற மாநகராட்சி உத்தரவை தொடர்ந்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கோவை மாநகரில் சுமார் 2 ஆயிரம் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகிறது. இவர்கள் போர் மூலம் தண்ணீர் எடுத்து பொதுமகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு விதி 406- படி உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டதும் அதில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் அமைப்பு நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய கூடாது என்றும், தடையை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.



மாநகராட்சியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை கோவை கொடிசியா வளாகத்தில் தங்களது லாரிகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.

 

இந்த வேலை நிறுத்தத்தால் கோவை மாநகரில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...