கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்: கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு

கோவை மாநகராட்சி 1-வது வார்டில் பாதாள சாக்கடை, சாலை சுத்தம், அங்கன்வாடி நடைபாதை மற்றும் வடிகால் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் ஆய்வு செய்தார்.

அப்பநாயக்கன்பாளையம் ஈஸ்வர சக்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் நேரில் பார்வையிட்டார். இப்பணியினை தரமாக செய்திட வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.



பார்க்சிட்டி பகுதியில் சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு அந்த பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.



அப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடி பள்ளியின் முன்புறம் குழந்தைகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், வார்டு முழுவதும் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...