கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ அணைப்பு செலவு: உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் - அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிட்ட தொகையில் உணவுக்கு மட்டும் ரூ.27 லட்சம் செலவிடப்பட்டதாக அதிமுக கவுன்சிலர் குற்றம்சாட்டியுள்ளார். மொத்த செலவு ரூ.76 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க செலவிடப்பட்ட தொகை குறித்து அதிமுக கவுன்சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், சமீபத்தில் நடந்த தீ விபத்து தொடர்பாக காட்டப்பட்டுள்ள கணக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தீப்பற்றியது. இந்த தீயை அணைக்க சுமார் 11 நாட்களில் ரூ.27,51,678 செலவு செய்துள்ளதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏப்ரல் 6 முதல் 17 வரை கட்டுக்கடங்காமல் தீப்பற்றியது குறித்தும், அதை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்தும் மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தில், தீயை அணைப்பதற்கான மொத்த செலவு ரூ.76,70,318 என காட்டப்பட்டுள்ளது. இதில் உணவு, தேநீர், காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்கு மட்டும் ரூ.27,51,678 செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு விவரம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...