கோவையில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் ட்ரோன் வழங்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் வழங்கப்பட்டது. இது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அறிவித்த நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 15,000 ட்ரோன்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக 1261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் 1095 மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 44 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரம் ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 6 முதல் 8 லட்சம் ரூபாய் ஆகும்.



வசந்தாமணி தனது பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு சென்னையில் ட்ரோன் பயிற்சியும், உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ட்ரோனை இயக்கிக் காண்பித்தார்.

இந்த ட்ரோன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களைத் தெளிக்க முடியும். மேலும், இந்த ட்ரோனை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கும், PLF கூட்டமைப்பிற்கும் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...