சூலூரில் சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரிக்கை: ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு அளித்துள்ளது. 9 மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில் உள்ள சர்க்கார் புறம்போக்கு நிலத்தில் வேலி அமைக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே உள்ள சூலூர் கிராம புலா எண். 704/5 (பழைய புல எண். 422/15) நெகாலை 400 சதுர மீட்டர் (10 சென்ட்) சர்க்கார் புறம்போக்கு நத்தம் இடத்தில் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகமும், வருவாய் கோட்டாட்சியர் தெற்கு அவர்களும் கடந்த 18.10.2023 அன்று உத்தரவிட்டனர்.



ஆனால், 9 மாதங்கள் கடந்தும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக சூலூர் பேரூராட்சி செயல் அலுவலரை நேரில் சந்தித்து, சர்ச்சைக்குரிய இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தாமலும், கடைகளை அமைக்காமலும் இருக்க உடனடியாக வேலி அமைக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும், வேலி அமைக்கும் போது பாதுகாப்பு வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரி காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...