காந்திபுரம் மேம்பாலப் பணிக்காக வேருடன் இடமாற்றம் செய்யப்பட்ட 60 ஆண்டு பழமைவாய்ந்த மரம்

கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 



இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த லேடிஸ்கிளப் அகற்றப்பட்டது. மேலும், அப்பகுதியில் ஒரு அரச மரம், ஒரு வேப்ப மரம், இரண்டு நெட்டிலிங்கம் மரம் இருந்தது.



இம்மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்த நெடுஞ்சாலைத்துறையினர், பின், அதனை வேருடன் இடமாற்றம் செய்ய முடிவுசெய்து ஏ.டி.இ.மணிவன்னன், ஓசை சையது அவர்களைத் தொடர்புகொண்டுள்ளார். தொடர்ந்து, மாநகர போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சரவணன் மற்றும் பிஆர்எஸ் காவல் ஆய்வாலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மரங்களை மாற்று இடத்தில் நட பிஆர்எஸ் மைதானத்தில் இடம் வழங்கியுள்ளனர்.



இதைத்தொடர்ந்து, நேற்று (செவ்வாய்) நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பினருடன் இணைந்து 60 ஆண்டு பழமையான அரச மரத்தை ஜேசிபி, கிரேன் மற்றும் ட்ரெயிலர் லாரி எனப்படும் பெரிய லாரி உதவியுடன் வேருடன் அகற்றி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர். இப்பணிகளை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.



மீதமுள்ள, ஒரு வேப்ப மரம் மற்றும் இரண்டு நெட்டிலிங்கம் மரங்கள் இந்த வார இறுதிக்குள் அகற்றப்பட்டு பிஆர்எஸ் மைதானம் மற்றும் திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் மறுநடவு செய்யப்படும் என ஓசை அமைப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஓசை சையது கூறுகையில், மரங்கள் நம் 'மூச்சுக்காற்று' என்பதின் அடிப்படையில் மரங்களை அழிக்காமல் அதற்கு மறுவாழ்வு அளிக்கும் பணி ஓசை அமைப்பினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது காந்திபுரம் சாலையில் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டுள்ள அரச மரம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. தற்போது அம்மரத்திற்கு 60 ஆண்டுகளே நிறைவடைந்துள்ளது. இன்னும் அந்த அரச மரம் 940 ஆண்டுகள் வாழ்ந்து மக்களுக்கும் பறவைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகளை தரவுள்ளது.

இடமாற்றம் செய்து நடவு செய்யப்பட்டுள்ள இந்த அரச மரம் இன்னும் 30 முதல் 60 நாட்களில் துளிர்விடத் துவங்கிவிடும். தொடர்ந்து, மண்புழு உரம், தென்னை நார் கழிவு உள்ளிட்ட இயற்கையான உரங்களை இதற்கு பயன்படுத்தி வருகிறோம்.

அரச மரம் மனிதர்களால் விதைகள் வைத்து வளர்க்கப்படுவதை விட பறவைகளின் எச்சங்கள் மூலமாகவே அதிகப்படியாக வளர்ந்து வருகிறது. மேலும், அம்மரங்கள் பறவைகளுக்கு நல்ல குடியிருப்புகளாகவும் உள்ளது.

எனவே, நாம் அதனை அழித்து விடாமல் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு பணம், செல்வம், ஆபரணங்கள் என சேர்க்காமல் அதிகப்படியான மரங்களை நட்டு வளர்த்து வைக்க வேண்டும். அந்த மரங்களே அடுத்த தலைமுறையினரின் மூச்சுக்காற்று ஆகும்.

ஓசை அமைப்பினரால் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிக்கு மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை, வருவாய் துறை, பொது மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், மரங்கள் வேருடன் இடமாற்றம் செய்யப்படுவதில் இந்திய அளவில் கோவை மாவட்டம் முன்னுதாரணமாக உள்ளது பெருமையளிக்கிறது" என்றார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...