கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும், 1 வார்டு வீதம் தற்பொழுதுள்ள நிலையில், அனைத்து கட்டிடங்களையும் விடுதலின்றி ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...