கோவையில் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரரின் கேமரா திருட்டு: போலீஸ் விசாரணை

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் சதாசிவத்தின் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா திருடப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புகைப்படக்காரர் ஒருவரின் கேமரா மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து புகைப்படக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக திருமண மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார். வெள்ளலூரில் ஸ்டுடியோ நடத்தி வரும் சதாசிவம், நேற்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நீராட்டு விழாவிற்கு புகைப்படம் எடுப்பதற்காக இரண்டு கேமராக்களுடன் சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, சதாசிவம் ஒரு கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வேளையில், மற்றொரு கேமராவை மேடையின் மீது வைத்திருந்தார். புகைப்படம் எடுத்து முடித்து திரும்பி வந்த போது, மேடையில் வைத்திருந்த கேமரா பையுடன் காணாமல் போயிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சதாசிவம், உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், ஒரு இளைஞர் சதாசிவத்தின் கேமராவை பையோடு எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட பையில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, லென்ஸ், சார்ஜர் மற்றும் 15,000 ரூபாய் பணம் இருந்ததாக சதாசிவம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடனைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...