அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவையில் நடைபெற்றது

கோவை கேரள கிளப்பில் தோல் தான விழிப்புணர்வு கருத்தரங்கம், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், ஆயுள் காப்பீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.


கோவை: அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா கோவை கேரள கிளப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தோல் தான விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம், அமைப்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவித்தல், மற்றும் ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.



இந்நிகழ்விற்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவனர் & தலைவர் ஆர்.கே.குமார் தலைமை உரையாற்றினார். பொதுச்செயலாளர் Dr.V.H.சுப்ரமணியம், கௌரவ தலைவர் சுந்தர வடிவேலு, மாநில தலைவி லதா அர்ஜூனன், மாநில தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



சிறப்பு விருந்தினர்களாக கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் மற்றும் உலக மலையாளி கவுன்சில் தலைவர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் தோல் தான விழிப்புணர்வு குறித்த விரிவான விளக்கங்களையும் அதன் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி ஆளுநரும், மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு பேசுகையில், "அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தோல் தான விழிப்புணர்வு குறித்த நிகழ்வில் இவர்களுடன் ரோட்டரி கிளப்பும் இணைந்து கைகோர்த்து மக்களுக்கு தோல் தான விழிப்புணர்வை எடுத்துரைக்கும் என்பதில் உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...