முதன்மை விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், சிறுமியர்களுக்கான விடுதிகள் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையராக விளங்குவதற்கு 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் மே 11ம் தேதியன்று காலை 8 மணியளவில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள் 2017- 18 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை வரும் மே 30ம் தேதி முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விபரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.05.2017 தேர்வு அன்று காலை 8 மணிக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...