உடுமலை அருகே கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசன கால்வாய் கரையில் பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூளவாடி-பென்னபுரம் பகுதியில் திருமூர்த்தி அணை பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் பகிர்மான கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்த கால்வாய் கரையோரம் உள்ள பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மரங்களை வெட்டிய நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது.



இந்த மரங்களை வெட்ட முறையான அனுமதி வழங்கப்பட்டதா அல்லது இது சட்டவிரோத செயலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரங்கள் வெட்டப்பட்டதால் கால்வாய் கரை பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...