பொள்ளாச்சி கள்ள சந்தையில் 1,382 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது

கைது செய்யப்பட ஒன்பது பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.



Coimbatore: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்தனர்.இதை அடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி கேரளா மாநில எல்லை அருகில் அமைந்திருப்பதால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.



கடந்த 22 ம் தேதிஆர் பொன்னாபுரம் பிரிவில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட வெளி மாநில 822 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட செந்தில்குமார், விக்னேஷ் பிரபு, ஆனந்த் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வெளிமாநில மது பாட்டில்களை கடந்தி வந்து பொள்ளாச்சியில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததும், இதில் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.



விசாரணையை தீவிரப்படுத்திய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பொள்ளாச்சி ராம் நகர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டிலில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த, விஜய், முருகன், முத்துப்பாண்டி, கார்த்தி, முகமது யாசிப்,சிவா உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பொள்ளாச்சிநீதித்துறை நடுவர்நீதிமன்றம் - 1 ல் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட ஒன்பது பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...