ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி தொடரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகங்கள் தலையீட்டு தீர்வு காண வலியுறுத்தி 10 இடங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலைபெற்று கூலி அடிப்படையில் அதனை துணியாக நெசவு செய்துகொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலித் தொகையை வழங்க வலியுறுத்தியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 2-ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 12-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தற்கள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், நாள் ஒன்றுக்கு 22 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட 8 இடங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில், ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் பட்டினி சாவு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...