ரேஷன் கடைகளில் தொடரும் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு - தரம் சரியில்லாததால் திருப்பி அனுப்பியதாக கோவை ஆட்சியர் விளக்கம்

டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று கோவை ஆட்சியர் பதிலளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாவது மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,536 நியாய விலைக் கடைகள் உள்ளன. மாதந்தோறும் 11,42,536 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே மாதம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவியது.

தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் டெண்டர் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது. மே மாதத்துக்கான பருப்பு, பாமாயில் பொருட்களை இம்மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதே போல் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மே மாதத்துக்கான பொருட்களை ஊழியர்கள் வழங்கினர். இருப்பினும் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு தொடர்வதால் கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகுப்பு பலருக்கு வழங்கப்பட வில்லை.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான ஒதுக்கீடும் விநியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோவை நுகர்வோர் அமைப்பினர் கூறும் போது, "பொதுவாக கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு முதல் வாரமும், மூன்றாவது வாரமும் பொருட்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலான ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் சரிவர கோவை மாவட்ட ஆட்சியர் விநியோகிக்கப்படுவதில்லை.

கண்காணிப்பு குழு அதிகாரிகள் சரிவர பணியாற்றுவதில்லை. மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். அதுவும் சரிவர நடப்பதில்லை. மாதந்தோறும் குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களும் சிறந்த தரத்துடன் திருப்பி விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறும் போது, டெண்டர் பணிகளால் பருப்பு, பாமாயில் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை தவிர பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்க பெறப்பட்ட பருப்பின் தரம் குறைவாக இருந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. விரைவில் பாமாயில், பருப்பு விநியோகம் சீராகும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...