உறுதி அளிக்கபட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி மண்பாண்ட தொழிலாலர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்து கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.



இதுகுறித்து மனு அளிக்கவந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட தொழிலில் சுமார் 40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016 பிப்ரவரி 14ம் தேதியன்று சென்னை வண்டலூரில் அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் மாநாட்டு நடைபெற்றது.

இதில், மழைக் கால பராமரிப்பு உதவி தொகை 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழில் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் தமிழக அமைச்சர்களிடம் அளிக்கபட்டது. இதில் 4 தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். 

அவர்கள் உறுதியளித்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...