இரண்டு துறை இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது - வானதி சீனிவாசன் கண்டனம்

காவல்துறையினர்-அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் மவுனமாக வேடிக்கைப் பார்ப்பது, இந்த மோதலை ரசிப்பது போல இருக்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று மே.25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பழிக்குப் பழி தீர்ப்பது போல காவல்துறை நடந்து கொள்ளக் கூடாது. காவல்துறையினர், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது. நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துனருடன் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, "காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணச் சலுகை இல்லை. அவர்களும் மற்றவர்களைப் போல பயணச் சீட்டு கட்டாயம் எடுக்க வேண்டும்" என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிக்க, இந்த விவகாரம் காவல்துறை - அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இடையிலான மோதலாக மாறியுள்ளது.

பழிக்குப் பழி தீர்ப்பது போல பல்வேறு விதிமீறல்களை காரணம் காட்டி அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். அரசின் இரண்டு முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பகிரங்கமாக மோதிக் கொள்வது அரசின் செயல்பாட்டையே சீர்குலைத்து விடும். மக்களுக்கு பெரும் துன்பத்தை தரும்.

காவல்துறையினருக்கு குறிப்பாக காவலர்களுக்கு, அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கை. இதை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனாலும், காவலர்களுக்கு இலவச பயணச் சலுகை நடைமுறைக்கு வரவில்லை. இதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம்.

அரசு நிர்வாகம் வெளிப்படையாக, நியாயமாக சட்டத்தின்படி இயங்க வேண்டுமானால் அரசுத் துறைகளில் உள்ளவர்கள் சட்டத்தின்படி நடக்க வேண்டும். ஒரு பிரச்னை வந்த பிறகு, ஒரு தரப்பை பழி வாங்குவதற்காக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அப்படியெனில் இதுவரை சட்ட மீறல்களை காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது போக்குவரத்து கழகங்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்காக அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காவல்துறையினர்-அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இதை கண்டுகொள்ளாமல் மவுனமாக வேடிக்கைப் பார்ப்பது, இந்த மோதலை ரசிப்பது போல இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. அரசு துறைகள் ஒவ்வொன்றுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும். அதே நேரத்தில், யார் விதிகளை மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழிவாங்குவதற்காக மட்டும் நடவடிக்கை எடுக்க கூடாது. முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு காவல்துறையினர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி அரசு பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணச் சலுகை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...