'காவசாகி' என்ற அரியவகை நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

காவசாகி நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளதாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டது. தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைகளுக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெரி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்க கூடிய இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நோயிக்கு அளிக்கப்படும் எதிர்ப்பு சக்தி மருந்து ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இம்யுனோ குளோபுலின் என்ற மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து குழந்தைகள் நோயிலிருந்து மீண்டு அண்மையில் நல்ல உடல் நலத்துடன் குழந்தைகள் வீடு திரும்பினர்.

கடந்த ஒரு வார காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் 1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று மே.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...